கோலாலம்பூர்: நவீன தொழில்நுட்பம் மற்றும் இணைய தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மலேசியர்கள் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் விஷயங்களில் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு முன்னேற்றங்களை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் அச்சுறுத்தும் அவதூறு, தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகளை பரப்பும் செயல் பொறுப்பற்ற செயல்.”
“மக்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேசிய ஒற்றுமையை மதிக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகிறேன். நவீன தொழில்நுட்பம் மக்களின் நல்வாழ்வுக்கு ஒரு கருவியாக இருக்க வேண்டும், மேலும் நாட்டை அழிக்காமல் செழிப்பை உருவாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.