Home One Line P2 நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்!

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்!

916
0
SHARE
Ad

வெல்லிங்டன் – நியூசிலாந்து நாட்டிலுள்ள வைட் தீவில் நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஒருவர் மலேசியர் என்பதை நியூசிலாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெல்லிங்டனில் உள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

தெற்கு தீவு – வடக்கு தீவு என இரண்டு தீவுகளைக் கொண்ட நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவுப் பகுதியில் உள்ள வைட் தீவு (White Island) என்ற இடத்தில் உள்ள எரிமலை வெடித்த போது அங்கு 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் இவர்களில் 13 பேர்கள் மரணமடைந்த வேளையில், 8 பேர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மரணமடைந்த மலேசியரின் அடையாளத்தை நிர்ணயிப்பதில் தொடர்ந்து நியூசிலாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் நியூசிலாந்திலுள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எரிமலை வெடிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த மலேசியர் குறித்த விவரங்கள் இருப்பின் கீழ்க்காணும் தொலைபேசி அல்லது மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

Malaysian High Commission telephone +64-43852439 / +64-210440188 (after hours)

email : mwwellington@kln.gov.my.