Home நடந்த நிகழ்ச்சிகள் சிலாங்கூர் அரசின் மீண்டுமொரு சாதனை

சிலாங்கூர் அரசின் மீண்டுமொரு சாதனை

742
0
SHARE
Ad

kalidபெஸ்தாரி ஜெயா, ஏப்ரல் 8- நீண்டகாலமாக பெரிது எதிர்பார்க்கப்பட்ட நிலப் பிரச்சனையைச்  சுமூகமாகத் தீர்த்து வைத்து, 122 சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுமனைக்கான உறுதிக்கடிதத்தை, பாரம் 5ஏ சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசு வழங்கியது.

கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மக்கள் கூட்டணி,அரசு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை வழங்குவது பற்றி ஆழமாகத் திட்டமிட்டது என்றும் நடப்பில் உள்ள நிலச்சட்டங்களை மீறாம, ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெற்று வீட்டுமனை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டதாக  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் கூறினார்.

“நிலச்சட்டப்படி ஒவ்வொரு நிலத்தின் மதிப்பில் இருபத்தைந்து விழுக்காடுத் தொகை பிரிமியமாகச் செலுத்த வேண்டும். ஆனால் நாங்கள் அதனை வெறும் ஆயிரம் ரிங்கிட்டாகக் குறைத்து மீதத் தொகை நிலத்தைப் பெற்றவர் அதனை விற்கும்போது செலுத்த வேண்டும் என்ற விதியை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூரை ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில் இதுவரை 20,000 நிலம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் 122 பேர் வீட்டுமனைக்கான உறுதிகடிதத்தை மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிருந்து பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் கோல சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அகமட், மாவட்ட அதிகாரி யாஸிட் பிடின், மாவட்ட மன்றத்  தலைவர் புவான் நொராய்னி ரொஸ்லான், மாவட்ட மன்ற உறுப்பினர்களான பெ.திரு மூர்த்தி, தென்னரசு, சமூகத் தலைவர் சுதணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.