கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது நலன் சம்பந்தப்பட்ட சில பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கும் என்று அதன் தலைவர் லத்தீபா கோயா தெரிவித்தார்.
இந்த வழக்குகளை மறுபரிசீலனை செய்ய ஒரு பொது உத்தரவை பிறப்பித்ததாகவும், வழக்குகள் தொடர்பான பல புகார்களைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.
“தெளிவான சான்றுகள் மற்றும் முழு விசாரணை இருந்தபோதிலும், ஏன் (பழைய வழக்குகள் மூடப்பட்டன) என்பதை என்னால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கை மூடுவதற்கு எந்த கட்டத்தில் உத்தரவுகள் வழங்கப்பட்டன என்பது தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
பொது நல வழக்குகள் முந்தைய அரசாங்கத் தலைமையுடன் தொடர்புடையதா என்று கேட்டதற்கு, இது பலவிதமான வழக்குகளை உள்ளடக்கியது என்றும் முந்தைய அரசாங்க தலைமை வழக்குகளை மட்டும் சார்ந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.