Home One Line P1 1981-ஆம் ஆண்டில் சாமிவேலு- மெரியம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது!

1981-ஆம் ஆண்டில் சாமிவேலு- மெரியம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது!

880
0
SHARE
Ad

ஈப்போ: முன்னாள் மஇகா தலைவர் எஸ்.சாமிவேலுவை தமது கணவர் என்று வழக்கு தொடர்ந்த மெரியம் ரோசலினின் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக ஈப்போவில் உள்ள உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

59 வயதான ரோசலின், சாமிவேலுவுக்கு கட்டுப்பாடற்ற அணுகலைப் பெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் அவருக்கு 25,000 ரிங்கிட் ஜீவனாம்ச உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த, தமது தந்தைக்கு எதிராக எஸ்.வேள்பாரி தாக்கல் செய்த சம்மன் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி செவிமடுக்கப்பட இருப்பதால், இந்த வழக்கினை அடுத்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்று ரோசலினை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ராயர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி, முன்னாள் மஇகா தலைவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா, தன்னையும் அவரது விவகாரங்களையும் கையாள முடியுமா, என்பதை தீர்மானிக்க நீதிமன்ற உத்தரவு கோரி வேள்பாரி தனது தந்தைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில், மெரியம் மற்றும் சாமிவேலு, இருவருக்கிடையில் 1981-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் திருமணம் நடந்ததாக மற்றுமொரு வழக்கறிஞர் ரமேஷ் கூறினார்.

1982-க்கு முன்னர் நடந்ததால் இந்த திருமணம் சட்டபூர்வமானது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மெரியம் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகவும், பணிப்பெண் சம்பளம், அவருக்காக சாமிவேலு வழங்கிய வீட்டு பராமரிப்பு செலவுகளுக்காகவும் மாதத்திற்கு 25,000 ரிங்கிட் பராமரிப்புத் தொகையைக் கோரியதாக அவர் கூறினார்.

அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் கடைசியாக சாமிவேலுவைச் சந்தித்ததையும், அவர் மனரீதியாக நல்ல நிலையில் இருப்பதாகவும் மெரியம் கூறினார்.

நான் அவரை ஒரு மணி நேரம் சந்தித்தேன், அவர் கவலைப்பட வேண்டாம், கோலாலம்பூருக்கு வர வேண்டாம் என்றும் எனக்கு அறிவுறுத்தினார். அவர் (சாமிவேலு) ஈப்போவுக்கு வருவதாகக் கூறினார்,” என்று மெரியம் கூறினார்.