Home One Line P2 பிரிட்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தேர்தல் வெற்றி உறுதி!

பிரிட்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தேர்தல் வெற்றி உறுதி!

589
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, பிரிட்டன் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்குள் பிரிட்டனின் மூன்றாவது பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி கணிசமான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அனடோலு ஏஜென்சி அறிக்கை வெளியிட்டுள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.

வாக்களிப்பு நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு (பிரிட்டன் நேரப்படி) முடிவடைந்த நிலையில், வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்படி போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஓங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்படி பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி 368 இடங்களை வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கன்சர்வேடிவ் கட்சியைத் தொடர்ந்து ஜெர்மி கோர்பின் தொழிலாளர் கட்சி, 32 விழுக்காடு வாக்குகளுடன் 191 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் இரவு 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இரவு 11 மணியளவில் ஆரம்ப முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பிரிட்டன் இதுவரை நடத்திய மிக முக்கியமான பொதுத் தேர்தல்களில் சுமார் 49 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எந்தவொரு கட்சியும் சொந்தமாக ஒரு அரசாங்கத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் 326 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்.