Home One Line P1 பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அன்வார் காவல் துறையில் வாக்குமூலம்!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அன்வார் காவல் துறையில் வாக்குமூலம்!

740
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையினர் நேற்று வியாழக்கிழமை அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

புக்கிட் அமான் டி5 (வழக்கு மற்றும் சட்டப் பிரிவு) உதவி இயக்குனர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியதாக அது தெரிவித்துள்ளது.

அன்வார் கோலாலம்பூரின் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் ஒன்றரை மணி நேரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அன்வார் மாலை 3.40 மணியளவில் அங்கு வந்து மாலை 6 மணியளவில் புறப்பட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரி முகமட் யூசுப் ராவுத்தர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புக்கிட் அமானில் சாட்சியம் அளித்தார்.

ஆயினும், அன்வார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.