Home One Line P1 பூலாவ் பெசார் தீவு சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டதா?

பூலாவ் பெசார் தீவு சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டதா?

875
0
SHARE
Ad

மலாக்கா: பூலாவ் பெசார் உரிமையை சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு அபிவிருத்திக்காக விற்கப்போவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மலாக்கா மாநில அரசு மறுத்துள்ளது.

எவ்வாறாயினும், அத்தீவின் 80 விழுக்காடு உரிமையின் பெரும்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்றும், தீவின் 20 விழுக்காடு மட்டுமே மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எம்) மற்றும் மலாக்கா இஸ்லாமிய மதக் குழு (எம்ஐஎம்) மூலம் மாநில அரசுக்கு சொந்தமானது என்றும் முதலமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்தார்.

பூலாவ் பெசாரின் மிகப்பெரிய பங்குதாரரான ஒரு தனியார் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், பிகேஎன்எம் மற்றும் எம்ஐஎம் ஒத்துழைப்புடன் அத்தீவை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்காகவும், விற்பனை குறித்து மாநில அரசுக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை என்றும் அட்லி கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், அடுத்த ஆண்டு தீவின் வடிவமைப்பு மற்றும் சுற்றுலாத் திட்டத்தை உருவாக்கும் யுனிவர்சிட்டி டெக்னோலாஜி மாரா (யுஐடிஎம்) உடன் இணைந்து மாநில அரசு 500,000 ரிக்கிட் ஒதுக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, பூலாவ் பெசார் தீவில் ஒரு சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, தீவின் தஹ்பிக் மையம் அலோர் காஜாவுக்கு மாற்றப்படும் என்று முகநூலில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.