Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்!

கிமானிஸ் இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடும்!

581
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: எதிர்வரும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்துவதாக சபா அம்னோ நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

சபா அம்னோ தொடர்புத் தலைவர் டத்தோ புங் மொக்தார் ராடின் கூறுகையில், அவர்கள் பல பெயர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், வேட்பாளர் வேட்புமனுவுக்கு முன்னர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணி கிமானிஸ் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதாக இன்றைய கூட்டம் முடிவு செய்துள்ளது. நாங்கள் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களை அடையாளம் கண்டுள்ளோம். தேர்தலைச் சந்திக்க எங்கள் பணிகளைத் தொடங்குவோம்என்றுஅவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோ அனிபா அமான் தேசிய முன்னணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்ற வதந்திகள் குறித்து கருத்து தெரிவித்த புங் மொக்தார், இந்த விவகாரம் குறித்து அம்னோ சபா திறந்த மனதுடன் ஏற்கும் என்று தெரிவித்தார்.

இத்தகைய ஊகங்கள் உள்ளன. ஆனால் அவர் (அனிபா) உண்மையில் அம்னோவில் சேர விரும்பினால் நாங்கள் அதைப் பற்றி விவாதிக்க முடியும். ஏனென்றால் கட்சியை விட்டு வெளியேறிய எந்த அம்னோ தலைவர்களையும் ஏற்றுக்கொள்ள அம்னோ எப்போதும் தயாராக இருக்கும், ஆனால், இது குறித்து நாங்கள் விரிவாக விவாதிக்க வேண்டும்.”

நாங்கள் இதனை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அம்னோவுக்கு ஓர் அமைப்புமுறை உள்ளது, அது அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.