Home One Line P1 “அனைத்துலக அளவில் மலேசியாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க நல்ல வாய்ப்பு!”- செடிவ் ஷாரிபு

“அனைத்துலக அளவில் மலேசியாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க நல்ல வாய்ப்பு!”- செடிவ் ஷாரிபு

722
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் காவல் துறை அதிகாரி அசிலா ஹாட்ரி நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட திடீர் வாக்குமூலம் குறித்து கருத்துரைத்த அல்தான்துன்யாவின் தந்தை, செடிவ் ஷாரிபு, இது மலேசியா தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெளிப்பாடு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிந்தால் மலேசியா அதன் பெயரை அனைத்துலக அளவில் மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாக அமையும்” என்று ஷாரிபு கூறியாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

இந்த சமீபத்திய வெளிப்பாடு உண்மையை விரைவுபடுத்துவதோடு, 13 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எங்களை விட்டு பிரிந்த என் மகளுக்கு நீதி கோருவதற்கும், எனது குடும்பத்திற்கு உதவுவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் குறித்து விரிவான ஓர் அறிக்கையை வெளியிடுவேன்என்று ஷாரிபு கூறினார்.

அல்தான்துன்யாவின் கொலைக்கு அசிலா ஹாட்ரி குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்ததை மறுபரிசீலனை செய்ய தற்போது அது குறித்து கூட்டரசு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட மெய்க்காப்பாளரான அசிலா, அல்தான்துன்யாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும், காவல் துறையின் மற்றொரு சிறப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரியான சிறுல் அசார் உமார், தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குடியேற்ற தடுப்பு மையத்தில் உள்ளார்.

இந்த கொலை தொடர்பில் நஜிப்பின் நெருங்கிய நண்பரான, அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிண்டா கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அசிலாவின் வாக்குமூலத்தின் உள்ளடக்கத்தை நஜிப் மற்றும் அப்துல் ரசாக் மறுத்துள்ளனர். இது வேண்டுமனே கட்டமைக்கப்பட்டது என்று நஜிப் குறிப்பிட்டுள்ளார்.