புது டில்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அப்பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு நாளை சனிக்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாநிலங்களில் தொடங்கப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டங்கள் தற்போது நாடு முழுதும் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, லக்னோவில் பெரிய அளவிலான வன்முறைகள் நடந்ததை தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ உட்பட பல பகுதிகளில் இணைய சேவை மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அரசாங்க உத்தரவை தொடர்ந்து, அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவையை முடக்கிவிட்டனர்.