Home One Line P2 “உண்மை தெரியாமல், மலேசியா தொடர்ந்து இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்!”- இந்திய வெளியுறவு...

“உண்மை தெரியாமல், மலேசியா தொடர்ந்து இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்!”- இந்திய வெளியுறவு அமைச்சு

1100
0
SHARE
Ad
படம்: நன்றி துன் மகாதீர் முகநூல்

புது டில்லி: நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் மகாதீர் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்ட கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

மலேசியப் பிரதமர் இந்தியாவுக்கு முற்றிலும் உட்பட்ட ஒரு விடயம் குறித்து மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ளார் என்று அது வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூன்று நாடுகளில் (பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) துன்புறுத்தப்படும் சிறுபான்மை குடிமக்களுக்கு குடியுரிமையை வழங்குகிறது. இந்த சட்டம் இந்தியாவின் எந்தவொரு குடிமகனின் அந்தஸ்தையும் எந்த வகையிலும் பாதிக்காது, அல்லது எந்தவொரு இந்தியருக்கும் அவரவர் நம்பிக்கைகளை இழக்கச் செய்யாது.”

#TamilSchoolmychoice

எனவே, மலேசிய பிரதமரின் கருத்து உண்மையில் தவறானது. உண்மைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல்இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு மலேசியாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.” என்று அது குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக, இஸ்லாமியர்களின் மீது பாகுபாடு காட்டப்படுவதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.