ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் உள்ள பாரம்பரியம், கலாச்சாரம், இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் பன்முகத்தன்மை அம்மாநிலத்தை தனித்துவமாக்குகிறது என்றும் அது பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
பினாங்கு மாநிலத்தின் தனித்துவம் நம் நாட்டிற்கு, வெளிநாட்டினரின் வருகைகளை ஈர்த்துள்ளது என்று மாமன்னர் கூறினார்.
உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பினாங்கு மக்கள் அனுபவித்த வளர்ச்சியில் தாம் ஈர்க்கப்பட்டதாக சுல்தான் அப்துல்லா தெரிவித்தார்.
இதனால், பினாங்கு தொடர்ந்து வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு மாநிலமாக மாற வேண்டும் என்று தாம் விருப்புவதாக அவர் கூறினார்.
“பினாங்கு தொடர்ந்து வளர்ந்து வருவதைக் காண வேண்டும் என்பதே எனது நம்பிக்கை. மிக முக்கியமாக, பினாங்கு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் பினாங்கு, அதன் அழகு, நல்லிணக்கம் மற்றும் பல இன வரலாற்றுக்கு பெயர் பெற்ற ஒரு மாநிலம்.” என்று அவர் குறிப்பிட்டார்.