Home One Line P1 குடியுரிமை திருத்தச் சட்டம்: “இந்தியா செய்வதை ஏற்க இயலாது, தகுதிகள் இல்லையென்றாலும் சீனர்கள், இந்தியர்களை குடிமக்களாக...

குடியுரிமை திருத்தச் சட்டம்: “இந்தியா செய்வதை ஏற்க இயலாது, தகுதிகள் இல்லையென்றாலும் சீனர்கள், இந்தியர்களை குடிமக்களாக நாங்கள் ஏற்றோம்!”- மகாதீர்

3459
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதால் வருந்தத்தக்கது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தபோதிலும், சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க செயல்படுவதைக் கண்டு வருந்துவதாக பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்தச் சட்டத்தின் காரணமாக ஏற்கனவே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆகவே, 70 ஆண்டுகளாக, அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குடிமக்களாக ஒன்றாக வாழ்ந்திருக்கும்போது, ​​இந்த காரியத்தை ஏன் செய்ய வேண்டும்?”

நாங்கள் அதை இங்கே செய்தால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். குழப்பம் ஏற்படும், உறுதியற்ற தன்மை இருக்கும், எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்.” என்று கோலாலம்பூர் உச்ச மாநாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக மையத்திற்கு வருகை தந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

இந்திய நாடாளுமன்றம் சமீபத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

மலேசியா நாட்டில் வாழும் சீன மற்றும் இந்திய சமூகங்களுக்கு குடியுரிமை உரிமைகளை வழங்கியுள்ளது என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

இந்த நாட்டிற்கு வந்த இந்தியர்களையும், சீனர்களையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவர்கள் தகுதி பெறாதபோதும் நாங்கள் அவர்களுக்கு குடியுரிமை வழங்கினோம், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.