Home 13வது பொதுத் தேர்தல் பூலாய் தொகுதியில் சலாஹுடின் ஆயூப் போட்டியிடுவாரா?

பூலாய் தொகுதியில் சலாஹுடின் ஆயூப் போட்டியிடுவாரா?

621
0
SHARE
Ad

salahuddin ayubஜோகூர் பாரு, ஏப்ரல் 8 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் பூலாய் நாடாளுமன்ற தொகுதியில், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் சலாஹுடின் ஆயூப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூலாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர் குறித்து, பாஸ் கட்சியின் தலைமையிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில், சலாஹுடின் நேற்று தனது முகநூல் பக்கத்தில் தான் பூலாய் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.ஆனால் அதுபற்றி விரிவான தகவல்கள் எதையும் தனது இடுகையில் அவர் குறிப்பிடவில்லை.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பூலாய் தொகுதியில் தேசிய முன்னணியை சேர்ந்த வேட்பாளர் டத்தோ நோர் ஜஸ்லான் முகமத், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் அப்துல்லா இட்ரிஸை விட 20,499 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். எனவே இம்முறை, ஜோகூர் மாநிலம் பொந்தியானை பிறப்பிடமாகக் கொண்ட சலாஹுடின், பூலாய் தொகுதியில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும், முகநூல் இடுகை குறித்து சலாஹுடின்னிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மிக விரைவில் தான் போட்டியிடும் தொகுதி பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை  பாஸ் கட்சியின் தலைமை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.