கோலாலம்பூர்: முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாக, இந்திய நாட்டின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது கருத்தில், இந்திய நாட்டின் விமர்சனத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.
இன்று சனிக்கிழமை கோலாலம்பூர் உச்ச மாநாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், அச்சட்டத்தின் தன்மையை கேள்விக்குட்படுத்தும் நிலையில்தான் தாம் அதற்காக குரல் கொடுத்ததாகக் கூறினார்.
உண்மைகளை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல், மலேசியா இனி இந்திய நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
“அது அவர்களின் பார்வை. எனக்கென்று எனது தனி பார்வை இருக்கிறது,” என்று அவர் கூறினார்.