ஈப்போ: பேராக் மாநில அரசாங்கம் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்கவும், பராமரிக்கவும், கட்டவும் 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கான பேராக் மாநில வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள், மாநிலத்தில் உள்ள இஸ்லாமியரல்லாத சமூகங்களின் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தில் மலேசியர்கள் அனுபவிக்கும் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, சமூக செழிப்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.
“எங்களிடம் குறைபாடுகள் இருந்தால், மக்களே ஒன்றாக வேலை செய்ய உங்களை அழைக்கிறேன். இதனால் நம் அன்பான பேராக் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கமாகவும், சமூகமாகவும் ஒருவருக்கொருவர் வெற்றி அடைவோம்,” என்று நேற்றிரவு கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
அவரது உரையை மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ சைனால் பாட்ஸி பஹாருடின் வாசித்தார்.