Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தல்: வாரிசான் வெற்றிப்பெற பெர்சாத்து களம் இறங்கும்!

கிமானிஸ் இடைத்தேர்தல்: வாரிசான் வெற்றிப்பெற பெர்சாத்து களம் இறங்கும்!

893
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாரிசான் வேட்பாளர் வெற்றிப் பெறுவதை பெர்சாத்து கட்சி உறுதி செய்யும் என்று சபா மாநில பெர்சாத்து கட்சித் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் நூர் தெரிவித்தார்.

கிமானிஸில் தேர்தல் இயங்திரங்களை எல்லா மட்டங்களிலும் தொடக்கிவிட்டதாகவும், வாரிசான் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்திற்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் கடுமையாக உழைப்போம். வாரிசான் வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த உதவுவோம். இந்த தேர்தலில் வாரிசான் வேட்பாளரை ஆதரிப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளோம்.”

#TamilSchoolmychoice

வாரிசான் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ” என்றுஅவர்இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி, தேர்தல் ஆணையம் ஜனவரி 18-ஆம் தேதி கிமானிஸ் நாடாளுமன்றத் இடைத்தேர்தலை நிர்ணயித்தது.