Home One Line P1 பூப்பந்து: கலப்பு இரட்டையர் வீரர் பெங் சூன், முகத்தசை வாதத்தினால் பாதிப்பு!

பூப்பந்து: கலப்பு இரட்டையர் வீரர் பெங் சூன், முகத்தசை வாதத்தினால் பாதிப்பு!

748
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் பூப்பந்து அணியின் கலப்பு இரட்டையர் வீரர் சான் பெங் சூன் இடது புறம் முகத்தசை வாதத்தினால் (பெல்ஸ் பால்ஸி- Bell’s Palsy) பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருத்தத்தக்க செய்தியை, 31 வயதான பெங் சூன் ஒரு காணொளி வாயிலாக, தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு நிமிட காணொளியில் பெங் சூன் இந்நோயைப் பற்றி விளக்கும் போது அவரது முகத்தில் ஒரு புறம் உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதை குறித்து காட்டினார்.

#TamilSchoolmychoice

நீங்கள் இதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை (முகத்தசை வாதம்). நான் இப்போது அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று அவர் எழுதியுள்ளார்.

பெங் சூன் பகிர்ந்த அந்த காணொளி 56,000-க்கும் மேற்பட்டபார்வைகளைக் கடந்துள்ளது. பூப்பந்து இரசிகர்கள்,பொது மக்கள் என அனைவரும் பெங் சூன் விரைவாக மீண்டு வர வேண்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

பெல்ஸ் பால்ஸி  எனும் நோய் ஒரு நபரின் முகத்தில் ஒரு பக்கம் பலவீனமாகவோ அல்லது முக நரம்புகளில் ஒன்று செயல்படாமல் போகும்போதோ, கட்டுப்படுத்தும்போது ஏற்படுகிறது.