Home One Line P2 50,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன!

50,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன!

717
0
SHARE
Ad
படம்: மைக் மெக்ல்ரைத் (நியூசிலாந்து காவல் துறை கண்காணிப்பாளர்)

வெல்லிங்டன்: நியூசிலாந்து அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நியூசிலாந்து தரப்பு நம்புகிறது.

கடந்த மார்ச் மாதம் கிறிஸ்ட்சர்ச் மசூதியில் ஏற்பட்ட சோகத்தைத் தொடர்ந்து, தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் அந்நாட்டின் புதிய கொள்கையைக் குறித்து இது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கொள்கையின் கீழ், 50,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த கொள்கையிலிருந்து அதிகாரிகள் உரிமையாளர்களிடமிருந்து ஒரு புதிய ஆயுத கொள்முதல் திட்டத்தை தொடங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பிரச்சாரத்தின் இறுதி வரை, சுமார் 32,000 பேர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக காவல் துறை அமைச்சர் ஸ்டூவர்ட் நாஷ் கூறினார்.

இந்தத் திட்டத்தின் வாயிலாக துப்பாக்கி உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.

சட்டவிரோதமாக பெறப்பட்ட ஆயுதங்களை கையாளும் எந்தவொரு நபருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.