Home நாடு பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன – மூசா

பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன – மூசா

712
0
SHARE
Ad

470x275x8d90cadaf8c508500e5f72aa77423673.jpg.pagespeed.ic.sVw3Psv_ic

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – தனியார் துப்பறிவாளர் பி.பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களே போதுமானதாக உள்ளதாக முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் மூசா ஹஸ்ஸான் இன்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங்  உட்பட, நாட்டில் பலரும் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டுமென்று வலியுறுத்திவரும் நிலையில், முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் மூசாவும் அது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளது இவ்வழக்கிற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 16 ஆம் தேதி  நடைபெற்ற வழக்கறிஞர் மன்ற ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பாலாவின் வழக்கறிஞரான அமெரிக் சிடு, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததாக வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால், தேசிய காவல்துறைத் தலைவரான இஸ்மாயில் ஒமார் மற்றும் சட்டத்துறைத் தலைவரான அப்துல் கனி பட்டேல் ஆகியோர் இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய புதிய ஆதாரங்கள் தேவை என்று கூறி மறுத்து வருகின்றனர்.

இவ்விவகாரம் குறித்து மூசா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய ஏற்கனவே போதுமான புதிய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இஸ்மாயில் ஒமார் ஏன் புதிய ஆதாரங்கள் தேவை என்று கூறிவருகிறார் என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.