Home One Line P1 “டாக்டர் மஸ்லீ மாலிக் மென்மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறோம்!”- டோங் சோங்

“டாக்டர் மஸ்லீ மாலிக் மென்மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறோம்!”- டோங் சோங்

779
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்த டாக்டர் மஸ்லீ மாலிக் உடன் கல்வி தொடர்பான எந்தவொரு விடயத்திலும், நிலை அல்லது அணுகுமுறையின் அடிப்படையில் தங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை டோங் சோங் மறுக்கவில்லை.

“எவ்வாறாயினும், டாக்டர் மஸ்லீ மாலிக் தலைமையிலான கல்வி அமைச்சகத்திற்கும், எங்களுக்கு என்ன வேறுபாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை உட்படுத்தியது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.” என்று டோங் சோங் பொதுச் செயலாளர் எங் சாய் ஹெங் தெரிவித்தார்.

“எங்களுக்கும் டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்கும் இடையே எந்த பொறாமையும் தனிப்பட்ட கோபமும் இல்லை.”

#TamilSchoolmychoice

டாக்டர் மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராக பணியாற்றிய காலம் முழுவதும் ஒரு நேர்மையான தலைவராக செயலாற்றியதை எங் சுட்டிக் காட்டினார்.

தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு அவர் எல்லா முயற்சிகளையும் செய்துள்ளார் என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு கடிதத்தில் தெரிவித்தார்.

“டாக்டர் மஸ்லீ மாலிக் கடந்த 20 மாதங்களில் மலேசியாவின் கல்வி அமைச்சில் தனது சேவையின் போது செய்த அனைத்து சேவை மற்றும் கருணைக்கும் எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். டாக்டர் மஸ்லீ, எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்துடன் வளர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதில் டாக்டர் மஸ்லீ மாலிக்கின் சாதனைகள், அவரது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என்று நம்புவதாகவும், நாட்டின் நலனுக்காகவும் மலேசியாவின் எதிர்காலத்துக்காகவும் அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற டோங் சோங் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.