Home நாடு ஜோகூர் : லாயாங் லாயாங் தொகுதியில் மாஸ்லீ மாலிக் போட்டி

ஜோகூர் : லாயாங் லாயாங் தொகுதியில் மாஸ்லீ மாலிக் போட்டி

606
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : பிகேஆர் கட்சியின் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்லீ மாலிக் அந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 தொகுதிகளில் ஒன்றான லாயாங் லாயாங் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

சிம்பாங் ரெங்கம் தொகுதியின் மற்றொரு சட்டமன்றத் தொகுதி மாச்சாப் ஆகும்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த 2 சட்டமன்றத் தொகுதிகளிலுமே 2018-இல் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனால், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராகப் போட்டியிட்ட மாஸ்லீ மாலிக் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

2020-இல் ஷெராட்டன் நகர்வு மூலம் துன் மகாதீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது மொகிதின் யாசினுடன் இணையாமல் சுயேட்சையாக செயல்பட்டு வந்தார் மாஸ்லீ மாலிக்.

பின்னர் கடந்த ஆண்டில் பிகேஆர் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் ஜோகூர் நாடாளுமன்றத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் மந்திரி பெசார் வேட்பாளராக அவர் முன்மொழியப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முடிவுக்கு ஏற்ப முதற்கட்ட நகர்வாக லாயாங் லாயாங் சட்டமன்றத்திற்கான வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.