Home One Line P1 குடிநுழைவுத் துறை சோதனையை மேற்கொள்ளாது நாட்டினுள் நுழைந்த சீன சுற்றுலா பயணிகள் குறித்து விளக்கம் கோரப்படும்!

குடிநுழைவுத் துறை சோதனையை மேற்கொள்ளாது நாட்டினுள் நுழைந்த சீன சுற்றுலா பயணிகள் குறித்து விளக்கம் கோரப்படும்!

600
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநில குடிநுழைவுத் துறையின் சோதனையிலிருந்து சீன சுற்றுலாப் பயணிகள் சோதனையை மேற்கொள்ளாமல் நுழைந்தது தொடர்பில் மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபி அப்துல், சபா குடிநுழைவுத் துறையை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எந்தவொரு முன்னேற்றத்தை கண்டறிய உள்ளதாகவும், இது மீண்டும் நடக்காது இருப்பதை உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

என்ன நடக்கிறது என்பதை தெளிவுபடுத்த குடிநுழைவுத் துறையை நான் அழைக்க உள்ளேன். மேலும், மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, தாவாவ் விமான நிலையத்தில், எந்தவொரு குடிநுழைவு முகப்பிலும் தங்களை சோதனைக்கு உட்படுத்தாமல் மூன்று சீன பயணிகள் கடந்து சென்றுள்ளனர்.    இதேபோன்ற குற்றத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நான்கு சீன பெண்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.