Home One Line P2 டில்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும்!

டில்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும்!

689
0
SHARE
Ad

புது டில்லி: டில்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தின் தேர்தல் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பு மனுத்தாக்கல் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது.

பதிவான வாக்குகள் பிப்ரவரி 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்

#TamilSchoolmychoice

கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி 70 சட்டமன்ற தொகுதிகளில் 67 தொகுதிகளைப் பெற்றது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி  அகற்றப்பட்டிருக்கும் நிலையில், தற்போது டில்லியில் தேர்தல் நடக்க உள்ளது.