Home One Line P1 “அரசியல்வாதிகள் காவல் துறைக்கு சுமையாக இருக்கக் கூடாது!”- ஹாமிட் பாடோர்

“அரசியல்வாதிகள் காவல் துறைக்கு சுமையாக இருக்கக் கூடாது!”- ஹாமிட் பாடோர்

690
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து அரசியல் உறுப்பினர்களும், தலைவர்களும் அவர்களின் நடவடிக்கைகளில் நிலையான சிந்தனையையும், பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் நினைவுபடுத்தினார்.

நாட்டின் பாதுகாப்பினை பராமரிப்பதில் காவல் துறையின் பங்கினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட இந்த நாட்டின் எதார்த்த நிலையை நன்கு புரிந்து கொள்ள அரசியல் தலைவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

#TamilSchoolmychoice

வளர்ந்த நாடுகளில் பல்வேறு இனங்களை ஒன்றிணைக்கப்படுவதை  நாம் காண்கிறோம். அரசியல் தலைவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டுமென்றும்,  நல்ல வழியில் நாம் கடக்க முடியாத பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும் நான் நம்புகிறேன்.”

மற்றவர்களை புண்படுத்தாமல் சவால் விடாமல் கவனமாக இருங்கள். ” என்று புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் சிறப்பு ஊடக மாநாட்டில் ஹாமிட் கூறினார்.