Home One Line P2 உக்ரேனிய விமான விபத்து: பயணம் செய்த 176 பயணிகளும் பலி!

உக்ரேனிய விமான விபத்து: பயணம் செய்த 176 பயணிகளும் பலி!

1045
0
SHARE
Ad
படம்: நன்றி ஐஆர்என்ஏ

தெஹ்ரான்: (கூடுதல் தகவல்களுடன்) தெற்கு தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி அனைத்துலக விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் (ஐஆர்என்ஏ) தெரிவித்துள்ளது.

இந்த விமானம் போயிங் 737 விமானம் என்று கூறப்படுகிறது. இது உக்ரேனிய விமான நிறுவனத்திற்கு சொந்தமானது.

உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தெஹ்ரானில் இருந்து கியேவுக்கு செல்லும் வழியில்  விபத்துக்குள்ளானது.

#TamilSchoolmychoice

இவ்விமானத்தில் பயணம் செய்த 167 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இறந்துவிட்டதாக துருக்கி செய்தி நிறுவனம் அனடோலு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 170 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டது, ஆனால் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் பின்னர் சமீபத்திய புள்ளிவிவரங்களை வழங்கினார்.