Home One Line P1 புரோட்டோன்: 2019-ஆம் ஆண்டின் சிறந்த காராக எக்ஸ்70 தேர்வு!

புரோட்டோன்: 2019-ஆம் ஆண்டின் சிறந்த காராக எக்ஸ்70 தேர்வு!

904
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட புரோட்டோன் எக்ஸ்70 எஸ்யூவி ரக கார், 2019-ஆம் ஆண்டின் சிறந்த கார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

18-வது வருடாந்திர மலேசிய கார் விருதுகளில் மதிப்புமிக்க இந்த விருதை வென்ற முதல் புரோட்டோன் மாதிரியாக எக்ஸ்70 திகழ்கிறது.

மலேசியாவின் மிகவும் ஆடம்பரமான மற்றும் பிரபலமான பிரிவு சி வகை புரோட்டோன் எக்ஸ் 70 கார், ஐந்து இருக்கைகள்  அல்லது நடுத்தர அளவு எஸ்யூவி பிரிவில் அங்கீகாரத்தையும் வென்றதுள்ளது. புரோட்டோன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் லி சுன்ரோங் இவ்வாண்டுக்கான சிறந்த வாகன நிறுவன அதிகாரியாக கௌரவிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்த அங்கீகாரத்துடன், டாக்டர் லி சுன்ரோங் இந்த விருதைப் பெற்ற மூன்றாவது புரோட்டோன் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிறார்என்று தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய ரக புரோட்டான் சாகா காரும், செடான் மற்றும் ஹேட்ச்பேக் பிரிவுக்கான விருதுகளை வென்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த ரக கார் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றுவரை, 42,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில், இது மலேசியாவின் சிறந்த ஏ பிரிவு காருக்கான விற்பனையைப் பெற்றுள்ளது.என்று அது குறிப்பிட்டுள்ளது.