Home One Line P1 சிலாங்கூரில் சளிக்காய்ச்சல் தொற்று நோய் தீவிரம் அடைந்தால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும்!

சிலாங்கூரில் சளிக்காய்ச்சல் தொற்று நோய் தீவிரம் அடைந்தால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும்!

572
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தில் ஏ வகை சளிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா ஏ) தொற்று நோய் தொடர்பான சமீபத்திய முன்னேற்றத்தை மாநில அரசு கண்காணித்து வருவதாக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு பள்ளியிலும் கடுமையான தொற்று நோய் கண்டிருப்பது தெரிய வந்தால் அப்பள்ளியை மூட உத்தரவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைக்கு, சைபர்ஜயாவில் சளிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக மாநில சுகாதார அமைச்சக அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், எண்ணிக்கை அதிகரித்து, பரவல் விகிதம் (சளிக்காய்ச்சல் தொற்று) வேகமாக இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உடனடி விடுப்பு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கை எடுப்போம்என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

நேற்று வியாழக்கிழமை, சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை ஏ வகை சளிக்காய்ச்சல் தொற்று நோய், சைபர்ஜெயா பள்ளி மாணவர்களுக்கும் கிள்ளானில் ஓர் ஆசிரியருக்கும் இருந்ததாகத் தெரிவித்திருந்தது.

இருப்பினும், சிலாங்கூரில் இதுவரை எந்த பள்ளியும் மூடப்படவில்லை.