Home One Line P2 புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது!

புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது!

656
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா முழுவதும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிற நிலையில், இச்சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நாடு முழுவதிலும் அமலுக்கு வருவதாகமத்திய உள்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இம்மசோதா, கடந்த மாதம் (டிசம்பர்) நாடாளுமன்ற மக்களவையில் 9-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா 11-ஆம் தேதி நிறைவேறியது

இதனிடையே, இந்த சட்டத்தை இரத்து செய்யக்கோரி டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.