Home One Line P1 “ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்

“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்

851
0
SHARE
Ad

லங்காவி – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருப்பதில் தவறேதும் இல்லை என்றும் முன்பு நஜிப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், பணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததற்கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்றும் துன் மகாதீர் கூறினார்.

2018-இல் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் தொடர்புடைய இல்லங்களிலும் பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தும் காவல் துறையினரின் அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களை எப்படி பொதுமக்களின் பார்வைக்கு வைத்தோமோ அதே போன்றுதான் இந்த ஒலிப்பதிவுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன என்று கூறிய மகாதீர், வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்படும் வரையில் தாங்கள் எதனையும் பொதுமக்களிடமிருந்து மறைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை (ஜனவரி 11) லங்காவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, 9 ஒலிப்பதிவுகள் பகிரங்கமாக்கப்பட்டது குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்தீபா கோயாவின் செய்கையில் நன்னெறி முறைகேடுகள் எதுவும் இல்லை என்றும் மகாதீர் தற்காத்தார்.