Home One Line P1 போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

715
0
SHARE
Ad
படம்: டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை காலை டாமான்சாராவில், டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக, தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

குறிப்பிடப்பட்ட அந்நேரத்தில் தாம் பூச்சோங்கில் உள்ள தமது வீட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 1.30 மணியளவில் அடிப் சியான், 10 அரசு அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டன. அவர், நேற்று வீடு திரும்புவதற்கு முன்பு டெங்கிலில் கட்சி உறுப்பினர்களை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில பெர்சாத்து தலைவரான டத்தோ அப்துல் ராஷ்ட் அசாரி கூறுகையில், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கைதாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.