Home One Line P1 40 தீயணைப்பு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

40 தீயணைப்பு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

770
0
SHARE
Ad

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயைத் அணைக்க உதவும் பணியில் ஈடுபட மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சுமார் 40 உறுப்பினர்கள் வருகிற புதன்கிழமை அங்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும், தற்போது அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அனைத்து தீயணைப்பு உறுப்பினர்களும், இதர அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த 20 நபர்களும் நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

தீ பரவாமல் கட்டுப்படுத்த மனிதவளத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதால் நாம் உதவுகிறோம்.” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி,  40 உறுப்பினர்கள் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் உதவிக்காக அடையாளம் காணப்பட்டதாக ஜேபிபிஎம் தலைவர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் கூறியிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் சுமார் ஐந்து மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாநிலங்கள் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நிலையில், குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 2,000 வீடுகள் அழிந்தன. மேலும், மில்லியன் கணக்கான விலங்குகள் தீயில் மாண்டன.