Home One Line P1 சளிக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்!

சளிக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்!

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல மாநிலங்களில் சளிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கில், சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 87 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 178 ஆக அதிகரித்துள்ளது என்று கல்வி இயக்குனர் அப்துல் ராஷீட் அப்துல் சாமாட் கூறினார்.

இதில் 68 ஆரம்பப் பள்ளிகளில் 159 மாணவர்களும், 19 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவர்களும் அடங்குவர் என்றும், அவர்களில் ஏழு பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பேராக்கில் 12 மாவட்டங்களில்  47 பள்ளிகளில் சளிக்காய்ச்சலால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை வரையிலும், சுமார் 94 மாணவர்கள் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில், 237 பேர் சளிக்காய்ச்சல் நோய்க்கு ஆளாகி உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களில், 67 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆவர்.

நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால் பொதுமக்கள் பீதியடையக்கூடாது, கிருமி தொற்றுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இது ஒரு தொற்றுநோய் அல்ல,” என்று அவர் நேற்று வியாழக்கிழமை கூறினார்.

மருந்தகங்கள் அல்லது மருத்துவமனைகளில் உடனடி சிகிச்சை பெற பெற்றோரைத் தொடர்புகொள்வதற்கு முன்னர், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மாணவர்களைப் பிரிப்பது உள்ளிட்ட நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், மாணவர்கள் சுத்தமான நீர் மற்றும் சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் மூலம் அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமும், இரும்பல் வரும் போது முகத்தை மூடிக் கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் அதிக அளவு இந்த நோய் பரவுவதை நிறுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.