Home One Line P1 வாரிசான் வெற்றிப் பெற அனைத்து நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளும் களத்தில் இறங்க வேண்டும்!- அஸ்மின்

வாரிசான் வெற்றிப் பெற அனைத்து நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளும் களத்தில் இறங்க வேண்டும்!- அஸ்மின்

648
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கிமானிஸ் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நள்ளிரவில் முடிவுக்கு வருவதால் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறுகையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு கிமானிஸ் இடைத்தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல் என்றும், நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும், வாரிசான் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

நாளை சனிக்கிழமை நடைபெற உள்ள இடைத்தேர்தலில், வாரிசான் வேட்பாளர் டத்தோ காரீம் புஜாங் வெற்றிப் பெறுவதை உறுதிப்படுத்த உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், மக்கள் தங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தனர். இது 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை, உங்கள் நிலைப்பாடு உறுதியானது என்பதையும், உங்கள் விருப்பம் இன்னும் அப்படியே இருப்பதையும் மீண்டும் நிரூபிப்போம்என்று நேற்று வியாழக்கிழமை மக்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.

தனக்குக் கிடைத்த கருத்துகளின்படி வாரிசான் வெற்றி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது புதிய கொள்கைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் அஸ்மின் கூறினார்.

இந்த நேர்மறையான கருத்து இடைத்தேர்தலின் போது மக்களின் ஆதரவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

கிமானிஸ் இடைத்தேர்தல் தேசிய முன்னணிக்கும், வாரிசான் கட்சிக்கும் இடையிலான நேரடி போட்டியாக அமைந்துள்ளது.