Home One Line P2 நிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு!

நிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு!

1253
0
SHARE
Ad

புது டில்லி: டில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு எதிர்வுரும் ஜனவரி 22-ஆம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் புதிய அறிக்கையின்படி, நால்வரும் எதிர்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொடூரச் செயலை ஆறு பேர் ஒன்றிணைந்து புரிந்தனர். அறுவரில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டிருந்ததால், அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு அனுப்பப்பட்டான். ராம் சிங் எனும் குற்றவாளி சிறைச்சாலையிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டான்.

#TamilSchoolmychoice

இதனிடையே, நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் செய்து கொண்டிருந்த மேல் முறையீட்டு மனுக்களும், கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேர் நிர்பயா கொலை வழக்குக்காக மரண தண்டனையை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.