Home One Line P2 பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கார் விபத்தில் காயம்

பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கார் விபத்தில் காயம்

932
0
SHARE
Ad
கணவர் ஜாவேத் அக்தாருடன் ஷபனா ஆஸ்மி – கோப்புப் படம்

மும்பை – பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி நேற்று சனிக்கிழமை (ஜனவரி 18) காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மும்பை-பூனா நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி கடுமையான காயங்களுக்கு இலக்காகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சக நடிகர்களும் குடும்பத்தினரும் சென்று கண்டு நலம் விசாரித்தனர்.

இந்திப் படவுலகின் புகழ் பெற்ற வசனகர்த்தாவும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தாரின் இரண்டாவது மனைவியான ஷபனா ஆஸ்மி பல திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை விருதுகளைப் பெற்றவர். 1984-இல் அவர் ஜாவேத் அக்தாரை மணந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்திப் படவுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரும் இயக்குநருமான பர்ஹான் அக்தார், பெண் இயக்குநரான சோயா அக்தார் ஆகிய இருவரும் ஜாவேத் அக்தாரின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்களாவர்.

விபத்தின் போது ஷபனா ஆஸ்மியின் கணவர் ஜாவேத் அக்தார் காரில் இருந்தாலும் சொற்ப காயங்களுடன் அவர் தப்பித்து விட்டார்.

ஷபனா ஆஸ்மியின் நிலைமை சீராக இருப்பதாகவும், அவரது நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிவித்திருக்கிறது.