Home One Line P2 மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க இயலாது!- உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க இயலாது!- உச்சநீதிமன்றம்

960
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியக் குடியுரிமை தொடர்பிலான புதிய சட்டமொன்றை இந்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி அமலுக்கு வந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சைகளையும், பல நகர்களில் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்திருத்தம் வழிசெய்கிறது.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீதான விசாரணை இன்று புதன்கிழமை நடத்தப்பட்டது.  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்..போட்கே தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் மனுக்கள் விசாரணைக்கு வந்தன

#TamilSchoolmychoice

மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமைச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.  

மேலும், ஐந்து நீதிபதிகள் கொண்ட நாடாளுமன்ற அமர்வு ஒன்றை உருவாக்கி அதற்குக் கீழ் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விசாரிக்க பரிந்துரைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், அது குறித்தான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, என்ன போராட்டம் செய்தாலும் இச்சட்டம் மீண்டும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தது மேலும் மக்களின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.