Home One Line P1 அமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்

அமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்

904
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ராகாவின் கலக்கல் காலை (காலை குழு), சுரேஷ் மற்றும் அகிலா,  மலேசியாவின் அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 மாற்றுத் திறனாளி பக்தர்களை பத்துமலை திருத்தலத்தின் உச்சிக்குத் ஏந்திச் சென்றனர். இந்நற்பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020-ஆம் நாளன்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைப் பற்றின சில விவரங்கள்:-

• விரைவில் மிகக் கோலாகலமாக நடைபெறவிருக்கும் மலேசியாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான 2020 தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ராகா அறிவிப்பாளர்கள், சுரேஷ் மற்றும் அகிலா ஆகியோர் சமூக சேவகர், அ. முரளியால் தோற்றுவிக்கப்பட்ட உள்ளூர் அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து சேவையாற்றவிருக்கின்றனர்.

சுமார் 250 ‘தமிழன் உதவும் கரங்கள்’ தன்னார்வலர்களுடன் இணைந்து, இருவரும் அவ்வமைப்பின் வருடாந்திர சேவையான மாற்றுத் திறனாளிகளை பத்துமலை திருத்தலத்தின் உச்சிக்குத் ஏந்திச் செல்லும் நற்பணியில் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

• மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமரச் செய்து 272 படிகளை சிரமம் பாராமல் கடந்து அவர்களின் நேர்த்திக் கடனையும் பிராத்தனையையும் எந்த ஒரு தடையுமின்றி செவ்வனே நிறைவேறச் செய்தனர் இந்தத் தன்னார்வலர்கள்.

• இவ்வருட திருப்பணியை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.பிரபாகரன் உட்பட மனிதநேய மாமணி இரத்னவள்ளி அம்மையாரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

ராகாவின் உள்ளடக்க மேலாளர் சுப்பிரமணியம் வீராசாமி இதுகுறித்து கூறுகையில், “அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 பக்தர்களுக்கு உதவும் பொருட்டு இத்திருப்பணியை மேற்கொள்வதில் ராகா மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான, ராகா மேலும் அதிகமான மலேசியர்களிடம் சென்றடைவதை இலக்காகக் கொண்டு இயங்கி வருவதோடு, அவர்களிடேயே அவர்களுக்குச் சாதகமான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உறுதி கொள்கிறது” என்றார்.

ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

இணையத்தில் (ஆன்-ஏரில்) கேளுங்கள்

இடம்         –    அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு – 99.3FM
அலோர்ஸ்டார் -102.4FM
பினாங்கு – 99.3FM
ஈப்போ – 97.9FM
சிரம்பான் – 101.5FM
மலாக்கா – 99.7FM
ஜோகூர்/ ஜோகூர்பாரு – 103.7FM
தைப்பிங் – 102.1FM
லங்காவி – 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை – 859