Home One Line P1 சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்!

சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்!

812
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை (சிஆர்எஸ்) பயன்பாடு குறித்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அபராதங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், சிஆர்எஸ்ஸின் முக்கியத்துவம் குறித்து சாலை பயனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) மற்றும் சாலை பாதுகாப்பு துறை (ஜேகேஜேஆர்) இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்.”

#TamilSchoolmychoice

சாலை பயனர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சிஆர்எஸ் கொள்கை பயனுள்ளதாக இருக்கும்என்று அவர் கூறினார்.

குழந்தைகளிடையே ஆபத்தான மரணங்கள் காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் வாகனங்களில் சிஆர்எஸ் பயன்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று லோக் கூறினார்.

“2007 முதல் 2017 வரை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,559 இறப்புகள் பதிவாகியுள்ளன. சிஆர்எஸ் கொள்கையை திறம்பட செயல்படுத்த அரசாங்கத்திற்கு உதவுவதில் மக்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு முக்கியமானதுஎன்று அவர் கூறினார்.