Home One Line P1 ஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை!- ஜேபிஜே

ஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை!- ஜேபிஜே

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜூன் மாதம் முதல் நாடு தழுவிய அளவில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில், வாகன பயிற்சி மற்றும் சோதனைகள் (மின் சோதனை) தானியக்க முறையில் செயல்படுத்தும் என்று சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) இயக்குனர் டத்தோஶ்ரீ ஷாஹாருடின் காலிட் தெரிவித்தார்.

இந்த அமைப்பு மூலம், பயிற்சி ஓட்டுனரின்  செயல்திறன் அளவீட்டு மற்றும் ஓட்டுநர் சோதனைகளின் முடிவுகள் தானியக்க முறையில் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை செயல்படுத்தப்படும்போது, பயிற்சி ஓட்டுனர்களுடன் வாகனத்தில் சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஓட்டுனர்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தவும், சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருப்பார்கள் என்று அவர் விளக்கினார்.

இது ஓட்டுனர்களுக்கு வசதியளிப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, வாகனத்தில் ஓட்டுனருக்கும், சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். அத்துடன் இத்துறையின் தரத்தை மேம்படுத்தவும் இலகுவாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

இந்த முறையை செயல்படுத்துவதற்காக, ஜோகூரில் உள்ள மூன்று ஓட்டுநர் நிறுவனங்கள் மாதிரி திட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஜூன் மாதத்தில் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவோம்என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.