தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கடந்த மாதம் 27ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மனித உரிமை மீறல் தொடர்பாக வேண்டுமென்றே, உண்மையில்லாத குற்றச்சாட்டை பெரிதுப்படுத்தி புகார்கள் கூறுபவர்கள், இலங்கைக்கு நேரில் வந்து பார்த்து, உண்மை நிலையை புரிந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். இலங்கையில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும், வெறும் செவிவழி செய்திகள் மற்றும் தவறான தகவல்களின் அடிப்படை யிலும், தவறான அனுமானத்தினாலும் கூறப்படுகின்றன.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களும், இலங்கையுடன் நட்பை முறிக்க வலியுறுத்துவதும் வருந்தத்தக்கவை. இலங்கை எல்லைக்குள் வரும் தமிழக மீனவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று இலங்கை கடற்படைக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.