Home One Line P1 எம்ஏசிசி: வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக அப்துல் அசிஸ் விசாரிக்கப்படுவார்!- காவல் துறை

எம்ஏசிசி: வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக அப்துல் அசிஸ் விசாரிக்கப்படுவார்!- காவல் துறை

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளியிட்டுள்ள உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் விசாரணைக்காக காவல் துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் உதவுவதற்கு பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரை சிறப்பு புலனாய்வு பிரிவு (டி5) அழைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இந்த விவகாரத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர்  நஜிப் ரசாக் எப்போது காவல் துறையினரால் அழைக்கப்படுவார் என்ற கேள்விக்கு,  அது குறித்து இன்னும் அறியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் விசாரிப்போம்என்று அவர் கூறினார்.

டி5 பிரிவு இனரீதியான பதற்றம் மற்றும் வெறுப்பைத் தொட்ட அதிக எண்ணிக்கையிலான வழக்குகளுடன் சிக்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இணையத்தில்வெறுப்பு நிறைந்தஅல்லது தேசத்துரோக அறிக்கைகளை வெளியிடும் எவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.”

வெறுப்பு பிரச்சாரத்திலிருந்து யாரும் விடுபட மாட்டார்கள். சட்டத்தை மீறுபவர் காவல்துறையின் முழு எதிர்ப்பையும் எதிர்கொள்வர்என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி, முன்னாள் உயர் அதிகாரிகளின் உரையாடல்களின் ஒன்பது  பதிவுகளை எம்ஏசிசி வெளியிட்டது. இதில் நஜிப் மற்றும் அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் உரையாடல்களும் இடம் பெற்றிருந்தன.