Home One Line P1 பிகேஆர்: “10,000 பேர் வெளியேறினால், வாரத்திற்கு 10,000 பேர் கட்சியில் இணைவர்!”- சைபுடின்

பிகேஆர்: “10,000 பேர் வெளியேறினால், வாரத்திற்கு 10,000 பேர் கட்சியில் இணைவர்!”- சைபுடின்

631
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் 10,000 பிகேஆர் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சுறுத்தல் குறித்து தமக்குத் தெரியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தமக்கு தெரிந்தவரை கட்சி ஒவ்வொரு வாரமும் 10,000 புதிய உறுப்பினர்களைப் பதிவுசெய்கிறது என்று சைபுடின் கூறினார்.

எத்தனை பேர் வெளியேறுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு பொதுச் செயலாளராக, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்த அரசியல் பணியகக் கூட்டத்தில் வாராந்திர பணி அறிவிக்கப்படுகிறது.”

#TamilSchoolmychoice

“ஒரு வாரத்திற்கு 10,000 பேர் இணைகிறார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 222 பிகேஆர் கிளைகள் மூலம் புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்ததிலிருந்து இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1 மில்லியன் உறுப்பினர்களை அடைவதற்கு, கட்சிக்கு கூடுதல் 30,000 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்று அவர் கூறினார்.

முன்னதாக, 13 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 15 அரசாங்க சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 150 பிகேஆர் உறுப்பினர்கள், சுரைடாவுக்குஆதரவுத் தெரிவித்து எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுரைடா கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடிமட்ட உறுப்பினர்கள் தங்கள் தலைவரைப் பின்தொடர தயங்க மாட்டார்கள் என்று சுரைடாவின் சிறப்பு அதிகாரி ஹாரிஸ் இட்ஹாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.