Home One Line P1 சீனப் பெருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ணன் தலைமையில் விலைக்கட்டுப்பாடு பரிசோதனைகள்

சீனப் பெருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ணன் தலைமையில் விலைக்கட்டுப்பாடு பரிசோதனைகள்

789
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் பாரு, பாண்டானில் உள்ள ஒரு மொத்த விற்பனை சந்தையில் 2020-ஆம் ஆண்டின் சீனப் பெருநாள் காலத்தின்போது பின்பற்றப்படுவதற்கு நிர்ணயக்கப்பட்ட அதிகபட்ச விலைக் கட்டுப்பாடுகள் மீதிலான பரிசோதனைகள் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டன.

இப்பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 30) இரவு 8.00 மணி முதல் நடந்தது.

இப்பரிசோதனையில் பல அதிகாரிகள் களம் இறங்கினார்கள். ஜோகூர் மாநில ஒற்றுமை செயற்குழு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் & பயனீட்டாளர் நலன் துறை தலைவரான இராமகிருஷ்ணன் இப்பரிசோதனையில் கலந்துக் கொண்டு பொருட்களின் விலைகளைப் பரிசோதித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பெருநாள் காலத்து அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டின் செயல்பாட்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் இந்த பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

இப்பரிச்சோதனையின் வாயிலாக, பெரும்பான்மையான வணிகர்கள் 2020-ஆம் ஆண்டு சீனப் பெருநாள் காலத்தின் அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை விதிகளையும் மற்றும் அமலாக்கங்களையும் முறையாகப் பின்பற்றியுள்ளனர் என்பது கண்டறியப் பட்டுள்ளது.

இப்பரிசோதனையின் போது, வியாபாரிகள் மீது எந்த வழக்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனினும், விலைக் குறியீடுகளை மேம்படுத்துமாறு 4 வியாரிகளுக்கு நினைவுறுத்தலும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.