Home One Line P1 இந்திரா காந்தி: “பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!”- ஹாமிட் பாடோர்

இந்திரா காந்தி: “பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!”- ஹாமிட் பாடோர்

941
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது தமக்குத் தெரியும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் எங்கே இருக்கிறார் என்று மக்களுக்குத் தெரியாது. அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது

இதைத் தீர்ப்போம், இதனால் அவர் இந்த நாட்டில் தங்கி தம் கல்வியைப் பெற முடியும்.”

#TamilSchoolmychoice

மறைக்க தேவையில்லை, முன் வாருங்கள்என்று அவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லாவுக்கு அவர் கூறினார்.

பெற்றோர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கும், சட்டத்தின் படி அவர்கள் இருவருக்கும் உரிமை இருப்பதால் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் காவல் துறை செயல்படுவதாக அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ரிட்சுவான் பிரசன்னா டிக்ஸாவை கடத்திச் சென்றபோது 11 மாதமாக இருந்த குழந்தையாக இருந்த அவரின் நலன் உறுதி இவ்வாறு செய்யப்படுவது மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

தனது மகளை இவ்வளவு காலமாகப் பார்க்காத தாயின் உணர்ச்சிகளைப் பற்றியும் தாம் கவலைப்படுவதாக அவர் கூறினார்.

கடவுள் விருப்பம், ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் விஷயத்தை தீர்க்க முடியும். நான் அதை நோக்கி செயல்படுகிறேன். எனவே, இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

சிறுமியை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விளக்கத் தவறியதற்காக இந்திரா காந்தி அதிரடி குழு (இங்காட்) தனக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்தால், அதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஹாமிட் கூறினார்.

என்மீது அல்லது அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுப்பது அவர்களின் உரிமை.” என்று அவர் கூறினார்.

இந்திராவின் வழக்கறிஞர்கள் நேற்று வியாழக்கிழமை, ஹாமிட் ஏன் இரு தரப்புக்கும் சாதகமான தீர்வை தேடுகிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.