Home One Line P2 இலங்கை கம்பன் விழாவில் சரவணன்

இலங்கை கம்பன் விழாவில் சரவணன்

1284
0
SHARE
Ad

கொழும்பு – மலேசியாவின் இந்திய அரசியல்வாதிகள் பலரும் உலகம் எங்கிலும் உள்ள பல நாடுகளுக்குச் சென்று, அதிகாரபூர்வ அரசாங்க விழாக்களிலும், அரசியல், சமூக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்கள்.

ஆனால், மற்ற நாடுகளில் நடக்கும் தமிழ் இலக்கிய விழாக்களில் மலேசியாவில் இருந்து இலக்கிய உரையாற்ற ஓர் அரசியல் தலைவரை அயல் நாட்டினர் அழைக்கிறார்கள் என்றால் அது டத்தோஸ்ரீ சரவணன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

அந்த அளவுக்கு தனது இலக்கிய ஆளுமையாலும், சரளமானத் தமிழ் மேடைப் பேச்சுகளாலும், உள்நாட்டில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் தமிழர்களிடையே முத்திரை பதித்தவர் சரவணன்.

#TamilSchoolmychoice

அவரது இலக்கிய உரைகளுக்காகவே, தமிழகம், இலங்கை, மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு பலமுறை அழைக்கப்பட்டவர் சரவணன்.

அந்த வகையில் இலங்கையின் அகில இலங்கைக் கம்பன் கழகம் பிப்ரவரி 1 முதல் 4-ஆம் தேதி வரை நடத்தும் கம்பன் விழாவில் ஏற்பாட்டாளர்களின் அழைப்பிற்கிணங்க சரவணன் கலந்து கொண்டார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான எம். சரவணன், கம்பன் இலக்கிய விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, இலக்கிய சிறப்புரையும் நிகழ்த்தினார்.

தமிழ் நாட்டிலிருந்து பாஜக தலைவர்களில் ஒருவரும், இந்திய மேலவை உறுப்பினருமான இல.கணேசனும் இந்த கம்பன் விழாவில் கலந்து கொண்டார். மற்ற அயல் நாடுகளில் இருந்தும் சிறப்பு விருந்தினர்கள், தமிழ் சான்றோர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழியின் சிறப்புக்கள் குறித்த உரைகள், நூல் வெளியீடு, பட்டி மன்றம், சுழல்முறையிலான சொற்போர், வழக்காடு மன்றம், கவிநய அரங்கம், சிந்தனை அரங்கம், இலக்கிய ஆணைக் குழு மற்றும் தமிழ் வளர்த்த சான்றோர் பெருமக்களுக்கு விருது வழங்குதல் என பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த நிகழ்ச்சிகள் கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெறுகின்றன.

“கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான இலங்கை கம்பன் விழா கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இலங்கை கம்பன் விழாவின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: