Home One Line P1 தைப்பூசம்: கொரொனாவைரஸ் பயம் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!- வேதமூர்த்தி

தைப்பூசம்: கொரொனாவைரஸ் பயம் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!- வேதமூர்த்தி

858
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரொனாவைரஸ் பாதிப்பு உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், இம்மாதிரியாக பொது மக்கள் ஒன்று கூடும் இடத்திற்கு செல்வது குறித்து மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததை அடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், திருவிழாவில் கலந்துகொள்பவர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்வதோடில்லாமல், மூக்கு மூடி அணிவது நல்லது என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது போன்ற கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

“நம் நாட்டில், கொரொனாவைரஸ் தொற்று சிறந்த முறையில் கையாளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (பிரதிநிதி) மலேசியாவையும் சுகாதார அமைச்சையும் வெளிப்படையானதாகவும், அதை விவேகமான முறையில் நிர்வகித்ததாகவும் பாராட்டினார்.”

“எனவே, கவலைப்பட தேவையில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் கூடுதல் கவனமாக இருங்கள்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.