Home One Line P1 “முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்” – வேதமூர்த்தியின் தைப்பூச வாழ்த்து

“முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்” – வேதமூர்த்தியின் தைப்பூச வாழ்த்து

1091
0
SHARE
Ad

புத்ராஜெயா : தைப்பூசத் திருவிழாவில் திளைத்துள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதேவேளை, தைப்பூச நந்நாளுக்கே சிறப்பாக உரிய முழுநிலவு பிரகாசத்தைப் போல திருமுருகக் கடவுளின் திருவருளும் அனைவருக்கும் கிடைத்திட எம்பெருமான் முருகப் பெருமானைத் துதிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தைப்பூச விழாவைப் பொருத்தவரை மலேசிய இந்து பக்தர்கள் உட்பட உலக அளவில் அனைத்து பக்தர்களுக்கும் தொற்றுநோய்க் கிருமியால் மருட்டல் எழுந்துள்ளது. மன வலிமையாலும் பக்தியாலும் இதை வென்றுவிட முடியும் என்றாலும் நாமும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். வேண்டுதலையும் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றும் அதேவேளை, நலிந்த நிலையில் இருக்கும் மக்களின் நலத்திலும் நாம் அக்கறைக் கொள்ள வேண்டும்.

காவடிகளையும் பால்குடங்களையும் சுமந்து இறைவனின் அருளை நாடும் அதே-வேளை, மற்ற அனபர்களின் நலனுக்காகவும் இறைவனிடம் துதிக்க வேண்டும். குறிப்பாக, நாட்டின் வளப்பத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும்கூட இறையருளை நாம் நாட வேண்டும். இந்த நல்ல வேளையில் பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு உரிய இடத்தை அடைய வேண்டும்.

#TamilSchoolmychoice

அனைத்து அன்பர்களுக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள தைப்பூச வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.