Home One Line P2 அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வர் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன

அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வர் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன

878
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்று முடிந்த டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வராகப் பதவியேற்பார் என்றும் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி 44 முதல் 55 வரையிலான தொகுதிகளை வெல்லும் என்றும் பாஜக சுமார் 15 தொகுதிகளை வெல்லும் என்றும், காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

70 தொகுதிகள் அடங்கிய டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கடுமையானப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.

#TamilSchoolmychoice

14.6 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட டெல்லி மாநிலத்திற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்களிப்பைத் தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.